இது ஒன்றும் எங்கள் ஹோம் பிட்ச் கிடையாது… சர்ச்சைக்கு ரோஹித் ஷர்மா பதில்!

vinoth
செவ்வாய், 4 மார்ச் 2025 (07:46 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த தொடர் முழுவதும் இந்திய அணி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் தனது போட்டிகளை விளையாடி வருகிறது. மற்ற அணிகள் மாறி மாறி வேறு வேறு மைதானங்களில் விளையாட இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு அனுகூலமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா “இது துபாய். இது ஒன்றும் எங்கள் ஹோம் பிட்ச் கிடையாது. அரையிறுதியில் நாங்கள் மைதானத்தில் விளையாடப் போகிறோம் என்பதே எங்களுக்குத் தெரியாது. இந்த மைதானம் எங்களுக்கும் புதிதுதான். நாங்களும் இங்கு அதிகப் போட்டிகளில் விளையாடியது கிடையாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

டெஸ்ட்டுக்கு சச்சின்… டி 20 போட்டிகளுக்கு நான் – சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments