Publish Date: Sat, 09 Sep 2023 (07:10 IST)
Updated Date: Sat, 09 Sep 2023 (07:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சாதாரணமாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர். அதனால்தான் அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என அன்போடு அழைத்து வருகின்றனர்.
ரோஹித் ஷர்மா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் என்று இதுவரை மொத்தம் 539 சர்வதேச சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மட்டுமே 553 சிக்ஸர்களோடு உள்ளார். கிறிஸ் கெய்லை முந்த ரோஹித்துக்கு இன்னும் 14 சிக்ஸர்களே தேவையாக உள்ளன.
இதுபற்றி பேசியுள்ள ரோஹித் ஷர்மா “நான் கிறிஸ் கெய்லின் சிக்ஸ்கள் சாதனையை முறியடிக்க விரும்புகிறேன். நான் என் வாழ்நாளில் அதை ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லை. அது நடந்தால் மிகவும் ஜாலியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.