இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டிய நியூசிலாந்து அணி இந்தியாவை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்த நிலையில் அதை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.
இதனால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த வொயிட்வாஷ் தோல்விக்குப் பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா கேப்டனாக தான் சரியாக செயல்படவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
அதில் “நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். நியுசிலாந்து அணி எங்களை விட எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினர். நான் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சரியாக விளையாடவில்லை. ஒரு அணியாக நாங்கள் சரியாக விளையாடத் தவறிவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.