Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது… ரோஹித் ஷர்மா டிவீட்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (10:17 IST)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி அதிரடியாக விலகியுள்ளார்.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய அணியை பல சாதனைகளைப் படைக்க வழிவகுத்தவர் விராட் கோலி. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், டி20 அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு நாள் கேப்டன் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் லிமிடெட் ஓவர் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கோலியின் ராஜினாமா குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘அதிர்ச்சி… ஆனால் இந்திய கேப்டனாக நீங்கள் செய்த சாதனைகளுக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு இப்போது அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட போவது யார்’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments