ரோஹித் ஷர்மாவை இம்பேக்ட் பிளேயராக இறக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமா?

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (09:07 IST)
கடந்த சில வாரங்களாக ஐபிஎல் பற்றிய பேச்சுகள் அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா மீண்டும் வாங்கப்பட்டதால் அவர் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

எதிர்பார்த்தது போலவே நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ள ரோஹித் ஷர்மாவை மரியாதை இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் நடத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். மளமளவென பாலோயர்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மாவை வெறும் இம்பேக்ட் ப்ளேயராக மட்டும் பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments