Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வந்த ரோஹித் ஷர்மாவின் அதிரடி இன்னிங்ஸ் …!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (14:47 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் ஷர்மா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் விளாசிய அவர் 29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து சவுத்தி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தற்போது இந்திய அணி 9 ஓவர்களில் 75 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. களத்தில் விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments