சமீபத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. முதல் முதலாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இவ்வளவு அதிக அணிகள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியை யார் வழிநடத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ரோஹித் ஷர்மா கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை. அதே போல மூத்த வீரர் கோலியும் அணிக்குள் அழைக்கப்படவில்லை.
இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை அணியில் விராட் கோலியை விட ரோஹித் ஷர்மாதான் தேவை என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக பேசியுள்ள அவர் “டி 20 உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா எனும் கேப்டன்தான் தேவை. அவர் 50 ஓவர் உலகக் கோப்பையில் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதே போல ஒரு பேட்ஸ்மேனாகவும் அதிரடியாக விளையாடினார்.” எனக் கூறியுள்ளார்.