Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸ்ரா..? எல்லாரும் பின்னாடி போங்க –சாதனைப் படைத்த ரோஹித் சர்மா

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (09:13 IST)
கடந்த சில வருடங்களாக அபாரமான ஃபார்மில் விளையாடிவரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா நேற்றையப் போட்டியில் மற்றுமொரு சாதனை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கான நேற்றையப் போட்டியில் ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். அந்தப் போட்டியில் அவர் 4 சிக்ஸர்கள் விளாசினர். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் விளாசிய 7 வது சர்வதேச இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதன் மூலம் அப்ரிடி-351, கிறிஸ் கெய்ல்-275, சனத் ஜெயசூரியா-270, தோனி-218, டீ வில்லியர்ஸ்-204 ஆகிய வீரர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இதில் இன்னொரு சிறப்பொரு அம்சம் என்னவென்றால் மற்ற வீரர்கள் அனைவரும் தாங்கள் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையை விட கம்மியான எண்ணிக்கையிலேயே சிக்ஸ்ர்கள் அடித்துள்ளனர். ஆனால் ரோஹித் சர்மா மட்டும் 193 போட்டிகளில் விளையாடி 202 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதாவது ஒரு மேட்சுக்கு ஒரு சிக்ஸர் என்ற வீதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தற்போது 31 வயதாகும் ரோஹித் சர்மா இதே அதிரடியில் விளையாடினால் ஓய்வு பெறுவதற்கு முபு அப்ரிடியின் சாதனை தகர்ப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments