Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமை நிராகரித்தனரா ரோஹித் & பும்ரா?

vinoth
செவ்வாய், 12 மார்ச் 2024 (11:51 IST)
நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது அந்த அணியின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு வீரராக மட்டும் விளையாட உள்ளார் ரோஹித் ஷர்மா. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடுவது குறித்து ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோருக்கு விருப்பம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமை ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் புறக்கணித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவர்கள் மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments