Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?

vinoth
திங்கள், 30 ஜூன் 2025 (11:36 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தனர்.

தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விராட் கோலிக்கு 36 வயதும், ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதும் ஆகிறது. 2027 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு அவர்கள் அதில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அட்டவணை ஜூலையில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இதனால் இந்த ஆண்டு கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆசியக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா போல முதுகுவலிப் பிரச்சனை… ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

அடுத்த கட்டுரையில்
Show comments