Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

vinoth

, செவ்வாய், 17 டிசம்பர் 2024 (15:03 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பவுலர்களின் போராட்ட பேட்டிங் இன்னின்ஸால் ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர். இதையடுத்து ஆடிய இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் பின்வரிசை ஆட்டக் காரர்கள் போராடி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.

இந்நிலையில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா ஆகியோர் பாலோ ஆனைத் தவிர்த்ததை இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரும் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் கைதட்டிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இது சம்மந்தமான புகைப்படம் வெளியாகி “இதுதான் இந்திய அணியின் மனநிலையா” என்ற கோபத்தை எழுப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்