Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேஸ்பால் வீரரானார் ரோகித் சர்மா: வைரல் வீடியோ

Advertiesment
பேஸ்பால் வீரரானார் ரோகித் சர்மா: வைரல் வீடியோ
, செவ்வாய், 5 ஜூன் 2018 (11:24 IST)
அமெரிக்காவில் நடந்த பேஸ்பால் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கலந்து கொண்டு, பந்து வீசி போட்டியை தொடங்கி வைத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வீரரான ரோகித் சர்மா அவ்வபோது இந்திய அணிக்கு கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு நாள் போட்டிகள் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா.
 
இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அப்போது அங்கு சியாட் நகரில் நடைபெறும் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு போட்டியை பந்து வீசி தொடங்கி வைத்தார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
இதன் மூலம் பேஸ்பால் போட்டியை தொடங்கி வைத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற கவுரவத்தை ரோகித் சர்மா  பெற்றுள்ளார்.

                                   Thanks: Cricnwin
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டிக்கு சில நிமிடங்களுக்கு திடீரென விலகிய செரினா வில்லியம்ஸ்