இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் ஆட்டத்தில் ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேனான முதல் டி-20 ஆட்டம் நேற்று நடந்தது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் கள் எடுத்தது.
இதில், கேப்டன் ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்(7 பவுண்டரி, 2 சிக்சர்கள்).
191 ரன்கள் என்ற இமாலயம் இலக்குடன் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களில் ஆட்டம் இழந்தது.
எனவே, இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இப்போட்டியில் ரோஹித் சர்மா 21 ரன் கள் எடுத்தபோது, 20 ஓவர் போட்டியில் அதிக ரன் கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
மேலும், டி-20 போட்டியில் அதிக அரை சதம் அதித்தவர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ரோஹித் மொத்தம் 31 அரை சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.