Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்பளத்துல இருந்து 12 லட்சம் கட்டுங்க..! – ரோஹித் சர்மாவுக்கு அபராதம்!

Advertiesment
சம்பளத்துல இருந்து 12 லட்சம் கட்டுங்க..! – ரோஹித் சர்மாவுக்கு அபராதம்!
, திங்கள், 28 மார்ச் 2022 (13:41 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை சேர்த்தது.

இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே 179 ரன்கள் குவித்து இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை அவர் அவரது ஊதியத்திலிருந்து செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெய்னாவுக்கு இப்படியாவது ஃபேர்வெல் கொடுத்திருக்கலாம்… ஷேவாக் ஆதங்கம்!