Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயமா... எங்களுக்கா....? ரோகித் சர்மா பேட்டி

பயமா... எங்களுக்கா....? ரோகித் சர்மா பேட்டி
, வியாழன், 20 செப்டம்பர் 2018 (20:34 IST)
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று பாகிஸ்தானை வீழ்த்தியது. 
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 29 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்னர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பின்வருமாறு பேசினார், தொடக்கத்தில் இருந்தே நாங்கள் மிகுந்த கட்டுக்கோப்பாக, ரன்களை வாரிக்கொடுக்காமல் பந்து வீசினோம். 
 
ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை மாற்றிக்கொண்டோம். இந்த போட்டியில் கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள்தான். அதேசமயம், அணியின் பேட்டிங்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக அமைந்திருந்தது.
 
ஆட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். பாகிஸ்தான் பார்ட்னர்ஷிப் குறித்து நாங்கள் பயப்படவில்லை. களத்திலும் வீரர்கள் பார்ட்னர்ஷிப்பை பார்த்து பயப்படவில்லை. 
 
இந்த இன்னிங்ஸை நாங்கள் அனைவரும் ரசித்து விளையாடினோம், இங்குள்ள சூழலுக்கு ஏற்றார்போல் நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு விளையாடியது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகரை ஏமாற்றிய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி