Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துடனான 2வது டி20 போட்டியில் ரோஹித் படைத்த உலக சாதனைகள்!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (07:13 IST)
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 50 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக   ஒட்டுமொத்தமாக டி20 போட்டியில் 2288 ரன்களை குவித்து , அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளார்.  இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் ( 2272)  அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை படைத்து இருந்தார். இவருக்கு அடுத்த படியாக பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் (2263), இந்திய அணி கேப்டன் விராட் கோலி (2167) ஆகியோர் இருந்தனர். 
 
டி20 போட்டியில் 20 அரை சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோஹித்துக்கு கிடைத்துள்ளது. விராட் கோலி 19 முறைக்கு மேல் அரை சதத்தை தாண்டி ரன்களை குவித்து இருக்கிறார். 
 
டி 20 போட்டிகளில் 100 சிக்சர்கள்  அடித்த 3வது வீரர் என்ற  சிறப்பினை ரோஹித் பெற்றுள்ளார்.   குப்டில் (103) 
கிரிஸ் கெயில்(102),  முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.  மேலும் அதிக சிக்சர்கள் வீரர்கள் பட்டியலில் ரோஹித்(349) 4வது இடத்தில்  இடத்தில் உள்ளார். அவருக்கு முன்பாக சாகித் அப்ரிடி (476), மெக்கல்லம் (398), ஜெயசூர்யா ( 352) , ஆகியோர் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments