Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வருடத்துக்குப் பிறகு …. வித்தியாசமான மாஸ்க்… தோனி விக்கெட்… ஸ்டார் ஃபர்பாமென்ஸ் ரிஷி தவான்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:09 IST)
நேற்றைய போட்டியில் அதிகம் கவனம் ஈர்த்த வீரராக ரிஷி தவான் இருந்தார்.

நேற்றைய போட்டியில் மீண்டும் தோற்று சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது சி எஸ் கே அணி. இந்த போட்டியிலும் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டைக் கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிஷி தவான்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ரிஷி தவான் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி ஓவரை சிறப்பாக வீசி வெற்றியைத் தக்கவைத்தார்.

நேற்றைய போட்டியில் அவர் பந்துவீசும்போது முகத்துக்கு வித்தியாசமான மாஸ்க் ஒன்றை அணிந்து பந்துவீசினார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது ஏன் என்றால் அவர் சமீபத்தில் மூக்கு சம்மந்தமான அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அதனால் அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த மாஸ்க்கை அணிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments