மைக்கேல் வாஹ்னை பங்கமாகக் கலாய்த்த ரிஷப் பண்ட்!

vinoth
சனி, 16 மார்ச் 2024 (07:26 IST)
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப் பட்டு வந்தது.

இதற்காக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் கடந்த சில மாதங்களாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை பரிசோதித்த என் சி ஏ அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து தற்போது பிசிசிஐ ரிஷப் பண்ட் 100 சதவீத உடல் தகுதியோடு இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அவர் மீண்டும் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் முன்னாள் வீரர்களான மைக்கேல் வாஹ்ன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் ரிஷப் பண்ட்டை நேர்காணல் செய்தனர். அப்போது கில்கிறிஸ்ட், “உன் எதிர் அணியில் வாஹ்ன் இருந்தால் அவரை எப்படி ஸ்லெட்ஜ் செய்வாய்” எனக் கேட்டார். அதற்கு பண்ட் உடனடியாக “நீ விளையாடுவதை விட்டு சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடுகிறாய்” எனக் கூறினார். இதைக் கேட்டு கில்கிறிஸ்ட் மற்றும் வாஹ்ன் ஆகிய இருவருமே சிரித்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

2வது திருமணத்தை உறுதி செய்த ஷிகர் தவான்.. அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிபவர் தான் மணமகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments