Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டோம்… டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் பண்ட் கருத்து!

vinoth
திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:40 IST)
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று  விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 191 ரன்கள் சேர்த்தது.

இதனை அடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய நிலையில் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் ரன்கள் குவிக்க திணறியது. கடைசி நேரத்தில் தோனி வந்து அதிரடியில் இறங்கினாலும் அந்த அணியால் 171 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் “பவுலர்கள் குறையே சொல்ல முடியாத விதத்தில் பந்துவீசினார்கள். நாங்கள் எங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுள்ளோம்.  பிரித்வி ஷா கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்கவேண்டும் என முடிவு செய்தோம்.  முகேஷ் இதுபோலவே கடைசி ஓவர்களில் பந்துவீசினால் சிறப்பாக இருக்கும்.  நான் கடந்த ஒன்றரை வருடங்களாக அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை. நான் என்னுடைய 100 சதவீதத்தையும் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

ஓய்வு பற்றி பரவும் தகவல்கள்… தோனி சொல்வது என்ன?

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments