Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே தோற்பது ஒரு மேட்டரே இல்லை.. கடைசி ஓவரில் தல தோனி ஜெயிச்சிட்டார்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

Siva
திங்கள், 1 ஏப்ரல் 2024 (06:44 IST)
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கடைசி ஓவரில் தல தோனி அதிரடியாக பேட்டிங் செய்ததை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய நிலையில் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் ரன்கள் குவிக்க திணறியது.

இந்த நிலையில் கடைசி ஓவரில் 41 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தல தோனி களத்தில் இருந்தார். அவர் முதல் பந்தில் ஒரு பவுண்டரி  இரண்டாவது பந்தில் சிக்சர், நான்காவது  பந்தில்   ஒரு பவுண்டரி  மற்றும் ஆறாவது  பந்தில்   ஒரு சிக்சர் என மொத்தம் 20 ரன்கள் அடித்தார்

இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கடைசி நேரத்தில் விண்ணில் மாயாஜாலம் காட்டிய தல தோனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது ஒரு மேட்டரே இல்லை என்றும் தல தோனி ஒரு பேட்ஸ்மேனாக ஜெயித்து விட்டார் என்றும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments