Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

vinoth
புதன், 2 ஏப்ரல் 2025 (07:39 IST)
ஐபிஎல் அணி உரிமையாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்கா. எல்லா போட்டிகளுக்கும் அட்டண்டன்ஸ் போடும் அவர் கடந்த சீசனில் கே எல் ராகுலோடு நடத்திய வாக்குவாதத்தில் பிரபலம் ஆனார். அணிக்குள் அதிக தலையீடு செய்பவரான அவர் அதன் பிறகு ரசிகர்களால் அதிகம் கேலி செய்யப்படுபவர் ஆனார்.

இந்நிலையில் அவர் இந்த ஆண்டு லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு வாங்கி, கேப்டனாக அறிவித்தார். ஆனால் இதுவரை ரிஷப் பண்ட் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் ஒன்றையும் விளையாடவில்லை. இதுவரை மூன்று போட்டிகளில் 26 பந்துகளை சந்தித்து 17 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுல் போல தற்போது ரிஷப் பண்ட்டிடமும் தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்திருப்பார் என ரசிகர்கள் மீம்களைப் பகிர ஆரம்பித்துள்ளனர். அதற்கேற்றார் போல நேற்று ரிஷப் பண்ட்டிடம் அவர் ஆவேசமாகப் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments