ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கும் ரிஷப் பண்ட்?

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (06:53 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இப்போது அவர் அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் பேட்டிங் மட்டும் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் கேப்டனாகவே அடுத்த சீசனில் விளையாடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments