நாங்க எல்லாம் பிட்ச் விஷயத்தில் தலையிடவே மாட்டோம்… ஆனா இப்போ? – ரிக்கி பாண்டிங் ஆதங்கம்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (11:00 IST)
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது.

சமீபகாலமாக மைதான பராமரிப்பு மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் இந்தியா ஆஸ்திரேலியா நாக்பூர் டெஸ்ட் போட்டியிலும் இது சம்மந்தமான இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. நாக்பூர் மைதானம் முழுக்க முழுக்க சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபற்றி ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரே வித்தியாசமாக நான் யூகிப்பது என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் விக்கெட்டுகள் எப்படி தயார் செய்யப்படுகின்றன என்பது குறித்து வீரர்களுக்கு உண்மையில் எந்த அக்கறையும் இல்லை என்று எனக்குத் தெரியும். நான் விளையாடும் போதோ, ​​மற்றும் நான் விளையாடி முடித்த பிறகோ, ஆஸி. கேப்டன்களோ அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எவரும் பராமரிப்பாளர்களிடம் பேசவே இல்லை. தங்களால் இயன்ற சிறந்த விக்கெட்டைத் தயாரிப்பதற்கான சுதந்திரத்தை பராமரிப்பாளர்களுக்குக் கொடுத்தார்கள்.” என மறைமுகமாக இந்திய அணி மைதான பராமரிப்பில் தலையிடுவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments