நான் கோப்பையை வென்று அதைக் கோலிக்காக சமர்ப்பிக்க வேண்டும்… இளம் வீரரின் ஆசை!

vinoth
புதன், 19 மார்ச் 2025 (07:28 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிதாக இந்த ஆண்டு ஆர் சி பி அணியில் இணைந்துள்ள இளம் வீரர் ஜிதேஷ் ஷர்மா “17 ஆண்டுகளுக்காக ஒருவர்(கோலி) ஒரு அணிக்காக அனைத்தையும் கொடுக்கும்போது, அவருக்காக ஒரு கோப்பை இருக்கவேண்டும் . இந்த சீசனை விராட் கோலிக்காக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அவர் என்னுடன் சேர்ந்து விளையாட வேண்டும். அவருக்காக நான் கோப்பையை வெல்லவேண்டும். அதை நான் அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments