Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி
, சனி, 23 ஜூன் 2018 (13:29 IST)
இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட் வாரியம், யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறையை செயல்படுத்தி வருகிறது.
 
உள்ளூர் போட்டிகளில் விளையாடும் நபர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றால் அவர்கள் யோ யோ டெஸ்டில் தேர்ச்சி அடைய வேண்டும். சமீபத்தில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன் மற்றும் முகமது ஷமி ஆகியோர் யோ யோ தேர்வில் தோல்வி அடைந்ததால், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை இழந்தனர். 
 
இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. யோ யோ டெஸ்ட் குறித்து முன்னாள் வீரர்கள் மற்றுமின்றி கிரிக்கெட் அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 
 
இந்நிலையில், இது குறித்து பேட்டி அளித்துள்ளார் இந்திய அணியில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி. அவர் கூறியது பின்வருமாறு, யோ யோ டெஸ்ட் கட்டாயம். யோ யோ டெஸ்ட் தொடர்பான தத்துவம் மிகவும் எளிதானது. நீங்கள் இந்த டெஸ்டில் பாஸ் ஆனால் இந்திய அணியில் விளையாடலாம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான். மற்றவர்களுக்காக இந்திய அணி செல்லாது. இந்திய அணி கேப்டன், தேர்வாளர்கள், ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இந்த முடிவில் தெளிவாக உள்ளது என கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபிபா உலகக்கோப்பை: சுவிட்சர்லாந்து, நைஜீரியா அணிகள் வெற்றி