Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஜெர்சியில் நான் ஜொலிக்க போகிறேன்… ரவி பிஷ்னாய் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (16:10 IST)
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரவி பிஷ்னாய் அது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணியில் இணைந்து சிறப்பாக பந்துவீசி வந்த அஸ்வின் மீண்டும் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய ரவி பிஷ்னாய் முதல் முதலாக அணிக்குள் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘இந்திய அணியின் ஜெர்சியில் நான் ஜொலிக்க உள்ளது பெருமை அளிக்கிறது. எனது வாய்ப்புக்காக காத்திருக்கவும், தயாராகவும் செய்தேன். இப்போது எனது கனவு நனவாகி உள்ளதாக உணர்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments