கோலி, ரோஹித் அழுததை பார்த்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது… அஸ்வின் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:40 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த உலகக் கோப்பை தொடர் தோல்வியால் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் கடுமையான வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் அழுததாக கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அஸ்வின் “கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அழுவதைப் பார்த்ததும் எனக்கு கடினமாக இருந்தது. பெரும்பாலும் நான் லாஜிக்காக யோசிப்பேன் என்பதால் தோல்வி என்னை பெரிதாக பாதிக்கவில்லை.  அதனால் எனக்கு அழுகை வரவில்லை. இந்திய அணியை ரசிகர்கள் பெரிதாக விமர்சிக்கவில்லை. அது எனக்கு திருப்தியாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை உலகக் கோப்பையை வெல்வது விதி என்றுதான் சொல்வேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments