கோலி 2031 உலகக் கோப்பையில் கூட விளையாடுவார்… டேவிட் வார்னர் கருத்து!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:06 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடர்தான் கடைசி தொடராக இருக்கும் என கருத்துகள் எழுந்துள்ளன. ஏனென்றால் கோலிக்கு இப்போது 35 வயது, ரோஹித் ஷர்மாவுக்கோ 36 வயது. ஆனால் கோலி கண்டிப்பாக அடுத்து 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பையில் விளையாடுவார் என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸி வீரர் டேவிட் வார்னரின் பதிவு ஒன்றில் ரசிகர் ஒருவர் கோலி 2031 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவார் என கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த வார்னர் “கண்டிப்பாக 2031 உலகக் கோப்பையில் கோலி விளையாட வாய்ப்புள்ளது. அவர் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறார். மேலும் கிரிக்கெட்டை அவர் அதிகமாக நேசிக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments