Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அர்ப்பணித்த ரஷீத் கான்!

Advertiesment
வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அர்ப்பணித்த ரஷீத் கான்!
, திங்கள், 16 அக்டோபர் 2023 (06:49 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த  போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி  49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 284 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ரமலானுல்லா அபாரமாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார். அதேபோல் இக்ரம் அலிகில் 58 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த உலகக் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பாராத முடிவாக இந்த போட்டி அமைந்து, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் “இப்போது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலரும் தங்கள் உடமைகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு இந்த வெற்றி ஆறுதலை அளிக்கும். இந்த வெற்றி அவர்களுக்குரியது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடப்பு சாம்பியனை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆப்கானிஸ்தான்!