Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

vinoth
வெள்ளி, 23 மே 2025 (09:54 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக டெஸ்ட் ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த மைல்கல்லை எட்டும் ஐந்தாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சச்சின், ரிக்கி பாண்டிங், காலிஸ், டிராவிட் ஆகியோருக்கு அடுத்து இந்த சாதனையை படைத்துள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 3000 ரன்கள் தேவை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட வாருங்கள்.. அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு..!

இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!

மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!

மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கவேண்டும்… துக்கமான நாளாகிவிட்டது- கோலி வருத்தம்!

காஸ்ட்லியான கால்பந்து வீரர்கள்..! வீரர்களை வாங்க ₹35,000 கோடி செலவு செய்த அணி உரிமையாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments