Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்கோப்பாக வீசிய சி எஸ் கே பவுலர்கள்… ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த இலக்கு இதுதான்!

vinoth
ஞாயிறு, 12 மே 2024 (17:11 IST)
தற்போது சென்னையில் சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிதான் சி எஸ் கே அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியாகும். அதனால் இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாகக் குவிந்துள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதன் படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஆரம்பம் முதல் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறினர். அந்த அணியின் ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கும், பட்லர் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியின் ரன்ரேட் அதலபாதாளத்துக்கு சென்றது.

கடைசி நேரத்தில் ரியான் பராக்(47) மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி முறையே ரன்கள் சேர்த்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 141 ரன்கள் சேர்த்தது. இந்த எளிய இலக்கை சி எஸ்கே அணி எட்டிப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணி சார்பாக சிமர்ஜித் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட வாருங்கள்.. அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு..!

இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!

மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!

மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கவேண்டும்… துக்கமான நாளாகிவிட்டது- கோலி வருத்தம்!

காஸ்ட்லியான கால்பந்து வீரர்கள்..! வீரர்களை வாங்க ₹35,000 கோடி செலவு செய்த அணி உரிமையாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments