Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

vinoth
திங்கள், 24 ஜூன் 2024 (08:41 IST)
டி 20 உலகக் கோப்பை  தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏ பிரிவில் இந்தியாவும் பி பிரிவில் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. இன்னும் இரண்டு அணிகள் எவை என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று இரவு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடக்கவுள்ளது. இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஆஸி அணிக்கு இந்த போட்டியை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

ஏனென்றால் அந்த அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதால் இந்தியாவுக்கு எதிரான போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  இந்த போட்டியில் ஆஸி தோற்று, ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை வென்றால் ஆஸி அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும்.

இந்நிலையில் இந்த போட்டி நடக்கும் ஆண்டிகுவா மைதானத்தில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்த போட்டி நடக்க உள்ளது. அந்த பகுதியில் போட்டி நடப்பதற்கு முன்னர் 7 மணி முதல் 10 மணி வரை மழைப் பெய்வதற்கான வாய்ப்பு 50 சதவீதம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல போட்டி நடக்கும் நேரத்தில் 32 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் ஆஸ்திரேலியா அணிக்கு வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை பந்தாடிய இங்கிலாந்து: 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

நான் டைம் டிராவல் செய்ய முடிந்தால் அதை மற்றும் மாற்றுவேன் – கவுதம் கம்பீர் ஓபன் டாக்!

கம்பேக் கொடுப்பதற்கு இந்தியாதான் சிறந்த அணி.. ஆஸி கேப்டன் மிட்செல் மார்ஷ் நம்பிக்கை!

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments