இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

vinoth
திங்கள், 1 ஜூலை 2024 (08:50 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த போட்டி கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கும் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கும் கடைசி போட்டியாக அமைந்தது.

இந்நிலையில் ஓய்வறையில் வீரர்களிடம் பேசி விடைபெற்ற ராகுல் டிராவிட், கோலியிடம் பேசும்போது “மூன்று வெள்ளை டிக்குகளை அடித்துவிட்டீர்கள் (ஒருநாள், டி 20 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை) இன்னும் ஒரு சிவப்பு டிக் மட்டும் உள்ளது (டெஸ்ட் சாம்பியன்ஷிப்). அதையும் விரைவில் முடியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments