Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஹானேவை ஏலத்தில் எடுக்க சொன்னதே தோனிதான்… சிஎஸ்கே பிரபலம் பகிர்ந்த தகவல்!

ரஹானேவை ஏலத்தில் எடுக்க சொன்னதே தோனிதான்… சிஎஸ்கே பிரபலம் பகிர்ந்த தகவல்!
, வெள்ளி, 23 ஜூன் 2023 (08:22 IST)
இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஆடிய அஜிங்க்யா ரஹானே மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணிக்கு வருவதற்கு முன்பு அவரை ஏலத்தில் எடுக்கக் கூட எந்த அணியும் முன்வரவில்லை. அவரை அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கே சென்னை அணியும் ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் ஏலத்துக்கு சென்னை அணி ஆலோசனைக் கூட்டத்தில் சிஎஸ்கே ஏலக்குழுவினரிடம் பேசிய தோனி ரஹானேவை எடுக்க சொன்னதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக பேசிய “ரஹானேவை நாம் எடுத்தால் அதைவிட சிறப்பானது எதுவும் இல்லை” எனக் கூறியதாக அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ரஹானே மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை நிரந்தரமாக்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற நெல்லை.. DLS முறையால் தோல்வி அடைந்த சேலம்..!