தவானை முறைத்த ரபடாவுக்கு அபராதம்!

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (16:19 IST)
இந்திய வீரர் ஷிகர் தவனை நோக்கி கையசைத்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கு ஐசிசி நடுவர்கள் அபராதம் விதித்துள்ளனர்.



இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரபடா வீசிய பந்தில் ஷிகர் தவன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து தவானை நோக்கி கையசைத்து விடை கொடுத்த ரபடா பெவிலியன் நோக்கி செல்லுமாறு சைகை காட்டினார்.

இந்நிலையில் ரபடாவின் நடத்தை குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 விழுக்காடு அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மோசமான நடத்தைக்காக ரபாடா இதுவரை 5 தகுதி இழப்பு புள்ளி பெற்றிருக்கிறார். இந்த புள்ளி எண்ணிக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் 8 ஆக உயர்ந்தால், சில சர்வதேச போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments