Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா தேர்வு செய்த பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (15:55 IST)
இந்திய அணியின் மூத்த வீரர் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்க உள்ள போட்டிதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள போட்டி. இந்த முறை இவ்விரு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. 14 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8-ல் இந்தியாவும் 5 ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஆடும் லெவனின் விளையாடும் வீரர்கள் பற்றிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா தன்னுடைய அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தன்னுடைய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு இடமளிக்கவில்லை.

புஜாரா அணி

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments