Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளே நான் இன்னும் என்னவெல்லாம் பார்க்கவேண்டும்… இன்ஸ்டாவில் புலம்பித் தள்ளிய பிரித்வி ஷா!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (07:06 IST)
திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார். அதே போல ஐபிஎல் போட்டிகளிலும் பிரித்வி ஷா சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறிவருகிறார்.

அது மட்டுமில்லாமல் உடல் எடைப் பெருகி அவர் சுணக்கமாகக் காணப்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் இந்தமுறை ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. அவரும் அவரைப் பற்றிக் குறிப்பிடும் வார்த்தை ‘வீணடிக்கப்பட்ட திறமையாளர்’ என்பதுதான்.

சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரை மும்பை அணி வென்ற போதும் அதில் இடம்பெற்ற பிரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் அடுத்து நடக்கவுள்ள விஜய ஹசாரே கோப்பைக்கான தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து பிரித்வி ஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ சொல்லுங்கள் கடவுளே… நான் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்.  65 இன்னிங்ஸ்.. 3399 ரன்கள்.. சராசரியாக 55.77…  இவையெல்லாம் இருந்தும் போதவில்லையா?.. ஆனாலும் நான் உன் மேல் நம்பிக்கை வைப்பேன். என் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஏனென்றால் நான் கண்டிப்பாக திரும்பி வருவேன்.  ஓம் சாய் ராம்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments