Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 24 மே 2018 (12:02 IST)
பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக்கொண்டதோடு, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது டிவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பிறகு குறிப்பிட்டிருந்த அவர் நீங்களும் இவாறு உடல்களை கட்டுக்கோபாக வைத்திருக்க வீடியோவை வெளியிடுங்கள், மேலும் இதே போல் ஃபிட்னஸ் சேலஞ்சை செய்து வீடியோ வெளியிடும்படி உங்களது நண்பர்களுக்கு சவால் விடுங்கள். நான் இப்பொழுது விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு இந்த சவாலை விடுக்கிறேன்  என கூறியிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட கோலி, தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு தனது டாஸ்கை முடித்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, பிரதமர் மோடி, கேப்டன் டோனி ஆகியோரை இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை செய்யும்படி கூறியிருந்தார்.
இந்நிலையில் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டேன், நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என  தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments