Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளே ஆஃப் போக சிஎஸ்கே எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்? – தொடங்கியது கால்குலேசன்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (16:17 IST)
ஐபிஎல் சீசன் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ள நிலையில் ப்ளே ஆஃப் கால்குலேசன்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட இறுதியை நெருங்கி விட்டது. ஒரு அணிக்கு 14 லீக் போட்டிகள் என்ற கணக்கில் பாதி அணிகள் 11 போட்டிகளை முடித்துள்ளன.

இந்நிலையில் தற்போதைய தரவரிசைப்படி 11 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று 3ல் தோல்வியடைந்து 16 பாயிண்டுகளுடன் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. இந்த 16 பாயிண்டுகளை கட் ஆஃபாக வைத்து கணக்கிடுகையில் எந்தெந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற கணக்கீடுகள் தொடங்கியுள்ளன.

தற்போது 13 பாயிண்டுகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணி 16 என்ற கட் ஆஃப் பாயிண்டுகளை தாண்ட இனிவரும் 3 மேட்ச்சுகளில் இரண்டு மேட்ச்சுகளிலாவது வெற்றி பெற வேண்டும். ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த 4 போட்டிகளில் 3 போட்டியாவது வெற்றி பெற வேண்டும்.

லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்து வரும் 3 போட்டிகளையுமே வெற்றி பெற வேண்டும். அதுபோல சன்ரைசர்ஸ், டெல்லி அணிகள் தங்களுக்கு மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மேலே உள்ள அணிகளை பாயிண்ட்ஸ் டேபிளில் கீழே இறக்கி ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆனால் திடீரென தற்போது ஃபார்முக்கு வந்துள்ள சன்ரைஸர்ஸ் அணியும், டெல்லி அணியும் தரவரிசையில் நடுவில் உள்ள அணிகளுக்கு பெரும் பிரச்சினையாக அமைய போகின்றன என்பது தெரிகிறது. கடந்த 2 போட்டிகளில் டெல்லி தொடர் வெற்றி பெற்று ஆர்சிபி, குஜராத் அணிகளை பதம் பார்த்தது. நேற்று சன்ரைஸர்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று ராஜஸ்தானுக்கு ஆப்பு வைத்தது. இதை வைத்து பார்க்கும்போது கடைசி லீக் போட்டிகள் மேலும் கூடுதல் பரபரப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

ஏலத்தில் எந்த டீமுக்கு செல்லப் போகிறீர்கள்?... போட்டியின் நடுவே ரிஷப் பண்டிடம் கேள்வி கேட்ட ஆஸி பவுலர்!

இது அவுட்டா…? கே எல் ராகுல் விக்கெட்டால் கிளம்பிய சர்ச்சை!

IND vs AUS Test Series: ஒரு ஆண்டில் அதிக டக் அவுட்கள்.. முதலிடத்தில் இந்தியா! - இப்படி ஒரு மோசமான ரெக்கார்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments