இந்திய அணிக்காக குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் பிரவின் குமார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனவர் பிரவீன் குமார். 2008 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் முத்தரப்பு தொடரை இந்தியா வெல்ல இவர் முக்கியக் காரணிகளில் ஒருவராக இருந்தார்.
அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கும் தேர்வு செய்யப்பட்டு பின்னர் காயம் காரணமாக விலகினார். பின்னர் இவர் சில காலம் இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஐபிஎல் தொடர் ஆரம்த்த 2008 ஆம் ஆண்டு இவர் பெங்களூர் அணிக்காக ஆட ஒப்பந்தமானார். ஆனால் தனக்கு பெங்களூர் அணியில் ஆடவிருப்பமில்லை என்றும் டெல்லி அணிக்காகவே விளையாட விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து “நான் டெல்லி அணிக்காக ஆட விரும்பினேன். ஆனால் லலித் மோடி “நீ பெங்களூர் அணிக்காக ஆடவில்லை என்றால் உன் கேரியரை முடித்து விடுவேன்” என மிரட்டி என்னை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார்” எனக் கூறியுள்ளார்.