Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா கேப்டன் இல்லை… தலைவர்- நள்ளிரவில் அவர் செய்த செயலை சிலாகித்த பியூஷ் சாவ்லா!

vinoth
சனி, 14 செப்டம்பர் 2024 (08:16 IST)
சமீபகாலமாக ரோஹித் ஷர்மா இந்தியக் கிரிக்கெட்டின் மையப்புள்ளியாக இருந்து வருகிறார். கோலிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பேற்ற அவர் டி 20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக இந்திய அணி வெல்லக் காரணமாக இருந்தார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கபப்ட்டு, அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் ரோஹித் ஷர்மாவுக்கு சம்மதம் இல்லை என்றும் அதனால் அவர் மும்பையை விட்டு விலகி வேறு ஒரு அணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா தலைமையின் கீழ் விளையாடிய பியூஷ் சாவ்லா அவர் பற்றி பேசும்போது “கிரிக்கெட்டில் கேப்டன்கள் இருக்கிறார்கள். அது போல தலைவர்களும் இருக்கிறார்கள். ரோஹித் ஷர்மா என்னைப் பொறுத்தவரை தலைவர். ஒருநாள் பின்னிரவு 2.30 மணிக்கு அவரிடம் இருந்து “நீ இன்னும் விழித்திருக்கிறாயா” என குறுஞ்செய்தி வந்தது. அதன்பின்னர் அவர் ஒரு காகிதத்தோடு என் அறைக்கு வந்துவிட்டார்.

அதில் அடுத்த நாள் நடக்கும் போட்டிக்கான சில வியூகங்கள் வகுக்கப்பட்டு, அது குறித்து என்னுடன் ஆலோசனை நடத்தினார்.நாளை ஆடுகளம் எப்படி இருக்கும்? குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு நான் எப்படி பந்துவீசவேண்டும் என்றெல்லாம் அன்று என்னுடன் விவாதித்தார். என்னிடம் இருந்து சிறந்ததைப் பெற அவர் அந்த நேரத்திலும் கவனம் செலுத்தினார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments