Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவின் கருத்தைக் கிண்டல் செய்த ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ்!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (09:11 IST)
நேற்று நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகும் பட்டத்தை கை நழுவ விட்டுள்ளது இந்தியா.

போட்டி முடிந்ததும் பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியை ஒரே போட்டியாக நடத்தாமல், மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். மேலும் இறுதிப் போட்டி எப்போதும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் மட்டுமே நடக்கக் கூடாது” என இரு ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

இதுபற்றி ஆஸி அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடம் கேட்ட போது “3 போட்டிகள் கொண்ட தொடர் என்ன? 16 போட்டிகள் கொண்ட தொடராகக் கூட நடத்தலாம். ஆனால் ஒலிம்பிக்கில் எல்லாம் ஒரு போட்டியாகதான் நடத்தப்படுகிறது. அதில்தான் வீரர்கள் வெற்றி பெறுகிறார்கள்” என நக்கலாக பதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments