Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

Prasanth Karthick
புதன், 14 மே 2025 (09:05 IST)

போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அதேநாளில் பிஎஸ்எல் போட்டிகளையும் தொடங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

 

இந்தியாவில் ஐபிஎல் டி 20 போட்டிகள் நடைபெறுவது போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பிஎஸ்எல் என்ற டி20 சீசனை நடத்தி வருகிறது. தற்போது இந்த போட்டிகள் நடந்து வந்த நிலையில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இரு நாடுகளிலுமே போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

 

தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை வரும் 17ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்த பிசிசிஐ அதற்கான புதிய கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்த பிஎஸ்எல் போட்டிகளை அதே 17ம் தேதி தொடங்க உள்ளது. அதில் இன்னும் 8 போட்டிகள் நடக்க உள்ளன. ஆனால் வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள திரும்ப வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் அதில் சமீபத்தில் ப்ளேயர் ஆப் தி மேட்ச் வென்ற வீரருக்கு வெறும் ஹேர் ட்ரையரை அவர்கள் பரிசாகக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments