Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காதா? – கிரிக்கெட் வாரியத் தலைவர் தடாலடி!

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காதா? – கிரிக்கெட் வாரியத் தலைவர் தடாலடி!
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:08 IST)
ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க இருந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஜம் சேத்தி அதிரடியானக் கருத்து ஒன்றை அறிவித்துள்ளார். அதில் “ பாகிஸ்தானில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியை அனுப்பாமல் இருக்க எந்த காரணமும் இல்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது” எனக் கூறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம்பாவே - மே.இ.தீவுகள் டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம்.. விக்கெட்டே இழப்பின்றி 221 ரன்கள்