Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்யூரிட்டிக்கு கூப்டது குத்தமாயா.. 26 லட்சத்துக்கு பிரியாணி பில்! – அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (12:56 IST)
பாகிஸ்தானில் விளையாட வந்த நியூஸிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பளித்த போலீஸார் செய்த வேலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையே நடைபெற இருந்த டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக நியூஸிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சென்றிருந்தனர். இந்நிலையில் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீண்டும் நியூஸிலாந்து திரும்பினர்.

இந்நிலையில் நியூஸிலாந்து வீரர்கள் முன்னதாக இஸ்லமாபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு 5 எஸ்.பிக்கள் உட்பட 500 போலீஸார் காவலுக்கு அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் இந்த போட்டிகள் ரத்தானது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஏகப்பட்ட பண இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதாதகுறைக்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு காவல் இருந்த காவலர்கள் நட்சத்திர விடுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பெயரை சொல்லி பிரியாணியாக மண்டியிருக்கிறார்கள். இதனால் பிரியாணி பில் மட்டும் 26 லட்ச ரூபாய் வந்துள்ளது. இந்த பில்லை கண்டதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

கோலியைக் காப்பி அடிக்கிறார் ஷுப்மன் கில்… முன்னாள் வீரர் விமர்சனம்!

திடீரென ரசிகர்களை இழக்கும் ஆர் சி பி அணி… பின்னணி என்ன?

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments