Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

vinoth
திங்கள், 17 மார்ச் 2025 (14:39 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆனால் தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளிலேயே தொடரை விட்டு வெளியேறியது . அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதால் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காமல் தொடரை விட்டு வெளியேறியது. மேலும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் தொடரை நடத்திய வகையில் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு மதிப்பில் சுமார் 869 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வீரர்களுக்கான சலுகைகளை எல்லாம் குறைக்க உள்ளதாகவும், போட்டிக் கட்டணங்களை குறைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தளவுக்கு நஷ்டம் ஏற்பட பாகிஸ்தான் தொடரில் இருந்து லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியதும், பாகிஸ்தான் ரசிகர்கள் பெரியளவில் மைதானத்துக்கு வந்து போட்டிகளைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments