Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை… ஆனாலும் பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசா?

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (14:51 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

அதன் பின்னர் நேற்று நடக்க இருந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் அவ்விரு அணிகளும் இந்த தொடரில் ஒரு போட்டியைக் கூட வெல்லவில்லை. ஆனால் அந்த அணிகளுக்கு ஐசிசி சார்பில் 2 கோடியே முப்பது லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொண்டதற்காகவே இந்த பரிசுத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு வல்லுனர்கள் பலக் காரணங்களை சொல்லி வருகின்றனர். அணியில் ஒற்றுமையின்மை, எந்த வீரரும் பொறுப்போடு விளையாடாதது மற்றும் போட்டியின் எந்தக் கட்டத்திலும் போராடும் தன்மையை வெளிக்காட்டாதது என அனைத்துத் துறைகளிலும் அந்த அணி பலவீனமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments