Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''சென்னை கிங்ஸ் ''கேப்டன் தோனியின் புதிய ஜெர்ஸி

Advertiesment
''சென்னை கிங்ஸ் ''கேப்டன் தோனியின் புதிய ஜெர்ஸி
, புதன், 24 மார்ச் 2021 (22:30 IST)
14-வது ஐபிஎல்  தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.  இத்தொடரில் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் புதிய ஜெர்ஸி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் இந்தாண்டு எப்போதும் நடத்தப்படும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதுகுறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 14வது ஐபிஎல்  தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி வரும் மே 30 ஆம் தேதி முடியவுள்ளது.

இத்தொடரில் முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், மும்பை – பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
webdunia

இதில், மொத்தம் 56 லீக் போட்டிகள் நடக்கும் எனவும்,  இவை , சென்னை,மும்பை,தில்லி, கொல்கத்தா, பெங்களூரு , ஆமதாபாத் ஆகிய மைதானங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் திறக்கப்பட்ட குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி, நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தார். ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த ஜெர்ஸி வடிவகைப்பட்டுள்ளது.  இந்த ஜெர்ஸியை தோனி அறிமுகம் செய்யும் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.இதில் மஞ்சல் வண்ணத்தில் மைந்தரா என்ற ஆன்லைன் நிறுவனத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு பந்தின் போது தந்தை என்னுடன் இருந்தார்… க்ருனாள் பாண்ட்யா ட்வீட்!