Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை

Advertiesment
கிரிக்கெட்
, சனி, 9 ஜூலை 2016 (11:40 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கிதுருவான் விதனாகே(25) கடந்த 16-ம் தேதி கொழும்பு பொது வீதியில் தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.


 
 
இந்நிலையில், இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஐ.சி.சி.யின் விதிமுறையை மீறியதற்காக அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இந்த தண்டனை மூலம் இவர் சர்வதேச போட்டி மட்டுமல்லாமல், இலங்கை ‘ஏ’ அணி கிரிக்கெட், கிளப்புகளுக்கு இடையிலான தொடர் என எந்தவகையான போட்டியிலும் கிதுருவான் விளையாட முடியாது.
 
10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிள்ள விதனாகே 370 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 26.42 ஆகும். டெஸ்டில் அதிகபட்சமாக 103 ரன்கள் அடித்துள்ள இவர், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயிற்சி ஆட்டம்: இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதல்