Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்ளேவுடன் பிரச்சனையா? விராட் கோலி விளக்கம்

கும்ளேவுடன் பிரச்சனையா? விராட் கோலி விளக்கம்
, சனி, 3 ஜூன் 2017 (20:46 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனக்கும், பயிற்சியாளர் கும்ளேவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ளேவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது தொடர்ந்து கொண்டிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால் பயிற்சியாளர் கும்ளே மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற பயிற்சியில் கோலி கலந்துக்கொள்ளவில்லை. இந்த சம்பவம் இருவரும் இடையே உள்ள பிரச்சனையை உறுதி செய்த நிலையில் தற்போது கோலி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
எனக்கும் கும்ப்ளேவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. யூகங்களின் அடிப்படையில் இந்த பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளது. இது போல கடந்த முறையும் நடைபெற்றது, என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவின் மானத்தை காப்பாற்றிய மழை